காண்டாமிருகங்களின் பாதுகாப்பை உறுதி செய்த மத்திய அரசு: 2022 ஆம் ஆண்டு கிடைத்த வெற்றி!
2022 ஆம் ஆண்டு காண்டாமிருகங்களின் வேட்டையாடுதல் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைந்து இருப்பது மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி.
By : Bharathi Latha
உலகளவில் காண்டாமிருகத்தின் தந்தத்துக்கு நிகரான விலை கிடைப்பதால் கொம்புக்காக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன. இதனால் அவற்றின் இனம் அழியும் நிலையில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் ஒற்றை காண்டாமிருகங்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறது. ஆனால் சமீப காலங்கள் ஆக வேட்டையாடப்படும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி மாநில அரசுடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த ஒரு சம்பவம் காரணமாக தற்பொழுது 2022 ஆம் ஆண்டு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படும் சம்பவம் பூஜ்ஜியமாக குறைந்து இருக்கிறது.
2022 ஆம் ஆண்டில் வேட்டைச் சம்பவங்கள் முற்றிலும் இல்லாத ஆண்டாக நிறைவடைந்திருக்கும் நிலையில், காண்டாமிருகத்தைப் பாதுகாக்கும் அசாம் மாநில மக்களின் முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அசாம் மாநில முதலமைச்சர் திரு.ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் ட்விட்டரை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் பகிர்ந்து தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார்.
குறிப்பாக பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி கூறுகையில், “இது மிகப் பெரிய செய்தி. காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதில் அசாம் மாநில மக்கள் காட்டியுள்ள வழிமுறைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்” மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News