Kathir News
Begin typing your search above and press return to search.

கடைக்கோடியில் இருக்கும் கடைசி மக்களுக்கும் அதிகாரம் - பிரதமர் மோடி உறுதி!

கடைக்கோடியில் இருக்கும் கடைசி மக்களுக்கும் அதிகாரம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

கடைக்கோடியில் இருக்கும் கடைசி மக்களுக்கும் அதிகாரம் - பிரதமர் மோடி உறுதி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Oct 2022 7:30 AM GMT

ஹைதராபாத் நகரில் ஐக்கிய நாடுகளின் இரண்டாவது உலக புவிசார் சர்வதேச மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதம மோடி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது பிரதமர் மோடி அவர்கள் பேசுகிறேன். இந்த மாநாட்டின் கருப்பொருள் உலகளாவிய புவிசார் இயக்கத்தை கட்டமைப்பதில் யாரும் விடுபடக் கூடாது. இதனை கடந்த சில நாட்களாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளில் காணலாம். கடைக்கொடியில் உள்ள கடைசி மக்களுக்கும் அதிகாரம் வழங்க நான் உழைத்து வருகிறேன்.


வங்கி கணக்கு இல்லாமல் இருந்த வந்த 45 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. காப்பீடு இல்லாமல் 13.5 கோடி மக்களுக்கு காப்பீடு செய்து தரப்பட்டுள்ளது. 1.10 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆறு கோடி மக்களுக்கு மற்றும் மக்களின் குடும்பங்களுக்கு குடிநீர் வழியாக குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. யாரும் விடுபடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது. இந்தியாவின் இந்த வளர்ச்சி பயணத்தில் தொழில் நுட்பமும் திறமையும் இரண்டு தூண்களாக உள்ளன. தொழில்நுட்பம் மாற்றத்தை கொண்டு வருகிறது.


நிகழ் நேர டிஜிட்டல் பரிமாற்றங்களில் இந்தியா உலகின் முதல் இடங்களில் உள்ளது. சிறிய வியாபாரி கூட டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஏற்றுக்கொள்கிறார். இதனைப் போன்று தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவினோம். 800 கோடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் போய் சேர்ந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பு சித்திட்டமும் தொழில் நுட்பத்தின் வழியாக செயல்படுத்தப்பட்டது. இந்தியாவின் தொழில் நுட்பம் என்பது யாரையும் விளக்கி வைப்பதல்ல எல்லோரையும் ஒன்று சேர்ப்பது தான். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாநாட்டில் பேசியிருக்கிறார்.

Input & Image courtesy: ABP News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News