Kathir News
Begin typing your search above and press return to search.

அதிகரிக்கும் கொரோனா 2வது அலை: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.!

பொதுமக்களிடையே போதுமான ஒத்துழைப்பு இல்லாததே தொற்றுக்கு காரணம் என கூறப்படுகிறது.

அதிகரிக்கும் கொரோனா 2வது அலை: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 April 2021 10:42 AM IST

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது பற்றி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

2வது அலையின் தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. பொதுமக்களிடையே போதுமான ஒத்துழைப்பு இல்லாததே தொற்றுக்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. 3000க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்துள்ளனர்.





அதே போன்று குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது. போதுமான ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கையிருப்பு உள்ளதால் மக்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது. ஏற்கனவே தொற்று பரவலை குறைப்பது பற்றி மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பலகட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா 2வது அலை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.





மேலும், வருகின்ற 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்பட உள்ளது. அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்தும் பிரதமர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News