21ம் நூற்றாண்டின் புதிய அத்தியாயம்: விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்ற பிரதமர் மோடி!
By : Thangavelu
இந்தியாவில் விவசாய பணிகளின் போது பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களை பயன்படுத்துகின்ற திட்டத்தை இன்று (பிப்ரவரி 19) காணொலி வாயிலாக கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விவசாயிகள் இரவு, பகலாக தங்களது விவசாய பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் மருந்து தெளிப்பதற்கு இன்றும் சிறிய அளவிலான டேங்குகளை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கவும் முதுகுவலியும் ஏற்படும் நிலை உருவானது. இதனை நவீனமயமாக்கும் முயற்சியில் மருந்து தெளிக்கும் பணிக்கு ட்ரோன்களை பயன்படுத்த பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார்.
In a special drive aimed at helping farmers, PM Narendra Modi yesterday flagged off 100 Kisan drones in different cities and towns of India to spray pesticides in farms across India. pic.twitter.com/5kFBgVGvF0
— ANI (@ANI) February 19, 2022
அதன்படி புதிய முயற்சியாக முதல் கட்டமாக 100 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசியதாவது: மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாய ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற திட்டத்தினால் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும், புதிய வாய்ப்புகளும் உருவாகிறது. விவசாய துறையின் வளர்ச்சியில் எவ்வித தடையும் இல்லை என்பதனை அரசு உறுதி செய்யும். 21ம் நூற்றாண்டின் நவீன விவசாய முறையில் இது ஒரு புதிய அத்தியாயம். மேலும், காய்கறிகளை சந்தைக்கு எடுத்துச்செல்வதற்கும் ட்ரோன்கள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: ANI