டெல்லியில் நடைபெற்ற தேசிய பழங்குடியின திருவிழா: விழாவை துவங்கி வைத்த பிரதமர்!
டெல்லியில் நடைபெற்ற மிக தேசிய பழங்குடியின திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்து இருக்கிறார்.
By : Bharathi Latha
பழங்குடியின கலாச்சாரத்தை பெரும் அளவில் மதிப்பளிக்கும் வகையில் ஆதி மகோத்சவ் என்ற பெயரில் மிக பழமையான பழங்குடியின திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார். முன்னேற்றத்திற்காக பங்காற்றிய பழங்குடியின மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களது நலனுக்காக இந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதன்படி பழங்குடியினர் கலாச்சாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தவும் முதல் முயற்சியாக இதை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த திருவிழா தற்பொழுது டெல்லியில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நம் இடத்தில் உள்ள பழங்குடியின கலாச்சாரம், கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள்,வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியானது மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் பிப்ரவரி 16ம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். நிகழ்ச்சியில் 200 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கு கொள்கிறார்கள் என்றும் அவர் பெறுவதுடன் குறிப்பிட்டார்.
Input & Image courtesy: Maalaimalar