உலகத்திற்கு முன்மாதிரியான நாடு இந்தியா: பில் கேட்ஸ் கூற காரணம் என்ன தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பில்கேட்ஸ் சந்தித்து பேச காரணம் என்ன?
By : Bharathi Latha
புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பில்கேட்ஸை சந்தித்து முக்கிய உரைகளை நிகழ்த்தி இருக்கிறார். குறிப்பாக இதுபற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், பில் கேட்ஸை சந்தித்து முக்கியப் பிரச்சனைகள் பற்றி விரிவான விவாதம் நடத்தியது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என கூறினார். இதுகுறித்து பில்கேட்ஸ் கூறுகையில், பூமியை ஒரு சிறந்த கிரகமாக உருவாக்குவது தொடர்பான அவரது உணர்வும் ஆர்வமும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வாரம் நான் இந்தியாவில் இருந்தேன். இங்கு சுகாதாரம், பருவநிலை மாற்றம், பிற முக்கியமான பகுதிகளில் நடக்கும் புதுமையான பணிகளைப் பற்றி அறிந்துகொண்டேன்.
உலகம் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா போன்ற ஆற்றல்மிக்க, ஆக்கப்பூர்வமான நாட்டைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது என்று பில் கேட்ஸ் கூறியுள்ளார். பிரதமருடனான தனது சந்திப்பை அவரது பயணத்தின் சிறப்பம்சமாகக் கூறியுள்ள பில் கேட்ஸ், “பிரதமர் மோடியும் நானும் தொடர்பில் இருந்தோம், குறிப்பாக கோவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குவது, இந்தியாவின் சுகாதார அமைப்புகளில் முதலீடு செய்வது குறித்து நாங்கள் உரையாடினோம்.
கேட்ஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் பல பாதுகாப்பான, பயனுள்ள மலிவு விலையில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா அற்புதமான திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தொற்றுநோய்களின் போது கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளதுடன் உலகம் முழுவதும் உள்ள பிற நோய்களைத் தடுக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். கோவின் வலைதளம் உலகிற்கு ஒரு முன்மாதிரி என்று பிரதமர் மோடி நம்புகிறார்.
Input & Image courtesy: News