ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்படுகிறார்!
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நான்கு நாட்கள் இன்று அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது ஐக்கிய நாடுகள் பொது அவை கூட்டத்தில் பேசும் பிரதமர், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.
By : Thangavelu

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலமாக வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடி, நாளை (23ம் தேதி) அமெரிக்க தொழிலதிபர்களை சந்தித்து ஆலோனை நடத்துகிறார். இதில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக்ஐயும் சந்தித்து பேச உள்ளார்.
இதன் பின்னர் ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் பிரதமர்களையும் சந்தித்து பேசுகிறார். அன்றை நாள் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்தித்து பிரதமர் மோடி, இரண்டு நாட்டு நல்லுறவு குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார்.
அதனை தொடர்ந்து செப்டம்பர் 24ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சனை மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய விவகாரங்கள் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்ட கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். அதனை முடித்துக்கொண்டு நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி 25ம் தேதி ஐநா சபையில் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalamurai