Kathir News
Begin typing your search above and press return to search.

ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: கொரோனா குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.!

தினமும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: கொரோனா குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 April 2021 10:40 AM IST

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

நாட்டில் 2வது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக தொற்று எண்ணிக்கை பதிவாகிறது. இதனால் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து வருகிறது.





அதே சமயம் கொரோனா தடுப்பூசி திருவிழாவை நடக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்கள் கொரோனா தடுப்பூசி போடும் திருவிழா நடைபெறுகிறது. தினமும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகமாக கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.





இந்நிலையில், மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் கொரோனா பரவல் குறித்தும், அதனை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகளை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News