அரசு மரியாதை இல்லை, அரசு பணிகள் ஒத்திவைப்பு இல்லை, ஓய்வு இல்லை - வாழும் வரலாறாக மாறிய பிரதமர் மோடியின் செயல்!
திட்டமிட்ட தனது பணிகளை செய்வதே தாயாருக்கு செலுத்தும் மரியாதை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
By : Bharathi Latha
பிரதமர் மோடியின் தாயார் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனை தொடர்ந்து இறுதிச்சடங்கு செய்து, மறைந்த தாயாரின் உடல் காந்தி நகரில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் மோடி இறுதி சடங்கு செய்தார். அதனை தொடர்ந்து தாயின் பாதங்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார்.
இந்த நிலையில் அவரவர் தங்கள் திட்டமிட்ட பணிகளை செய்யுங்கள் என்று பிரதமர் மோடியின் குடும்பத்தினர் வேண்டி இருந்தார்கள். மேலும் தங்களது பணிகளை திட்டமிட்டபடி செய்வதை பிரதமரின் தாயாருக்கு செலுத்தும் மரியாதை ஆகும் என்றும், மறைந்த ஆத்மாவை மனதில் நிறுத்துவதை போதுமானது. கடினமான காலங்களில் அனைவருக்கும் பிரார்த்தனைகள் மற்றும் இரங்களுக்கு நன்றி என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
பிரதமரின் தாயாரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் நாடு முழுவதிலும் இருந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar