தண்ணீர் பாதுகாப்பை உணர்த்து மக்கள், அரசுடன் செயல் படுகிறார்கள்: பிரதமர் மோடி பெருமை!
தண்ணீர் பாதுகாப்பிற்கு இந்தியா முழுவதும் அளப்பரிய பங்களிப்பை மக்கள் கொடுத்து இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்.
By : Bharathi Latha
தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் உரையாற்றினார். இம்மாநாட்டிற்க்கு தண்ணீர் தொலைநோக்கு 2047 என்பது கருப்பொருளாகும். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தண்ணீர் பாதுகாப்புக்காக இந்தியா மேற்கொண்டுள்ள அளப்பரிய பங்களிப்பு குறித்து பேசி, நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர்களின் முதலாவது அகில இந்திய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
நமது அரசியலமைப்பில், தண்ணீர் என்ற பொருள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது, நாட்டின் கூட்டு இலக்குகளை அடைய மாநில அரசுகளின் நீர் பாதுகாப்புக்கான முயற்சிகள் பெரிதும் உதவும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். "அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்தப் பெருவிழாவின் பயணத்தின் முக்கியமான பரிமாணமாக தண்ணீர் தொலைநோக்கு 2047 உள்ளது" என்று பிரதமர் குறிப்பிட்டார். முழு அரசு மற்றும் முழு நாடு என்ற தனது தொலைநோக்கை வலியுறுத்திய நீர் வள அமைச்சகம், பாசன அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ஊரக, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் போன்ற மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான உரையாடல் அமையும் விதத்தில் அனைத்து மாநிலங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தத் துறைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தகவல்களும், தரவுகளும் இருந்தால் திட்டமிடலுக்கு உதவி கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார். அரசின் முயற்சியால் மட்டும் வெற்றி கிடைக்காது என்று குறிப்பிட்ட பிரதமர், பொது மற்றும் சமூக அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்களின் பங்கு குறித்து தெரிவித்ததுடன், நீர் பாதுகாப்பு தொடர்பான இயக்கங்களில் அதிகளவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் அரசின் பொறுப்புடைமையை குறைக்காது என்றும், அனைத்துப் பொறுப்புகளையும் மக்கள் மீது விதிப்பது அர்த்தமல்ல என்றும் பிரதமர் விளக்கினார்.
Input & Image courtesy: Times of India