இந்திய கலாசாரத்தை பார்த்து உலகமே வியக்கிறது - கேதர்நாத் சிவன் கோவிலில் பிரதமர் மோடி பேச்சு!
ஆதிகுரு சங்கராச்சாரியார் சிலைக்கு முன்பு மீண்டும் கட்டப்பட்ட சமாதியில் அமைந்திருந்த அனுபவத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. சில அனுபவங்கள் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்டவை. பாபா கேதர்நாத்தின் அடைக்கலத்தில் எனது உணர்வு இப்படிதான் உள்ளது. ஆன்மிகம், மதம் ஆகியவை ஒரே மாதிரியான கருத்துகளுடன் மட்டுமே தொடர்பு படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் இந்திய தத்துவம் மனித நலன் குறித்து பேசுகிறது.
By : Thangavelu
கேதர்நாத் சிவன் கோவிலில் வழிபட்ட பிரதமர் மோடி பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் அவர் பேசும்போது:
ஆதிகுரு சங்கராச்சாரியார் சிலைக்கு முன்பு மீண்டும் கட்டப்பட்ட சமாதியில் அமைந்திருந்த அனுபவத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. சில அனுபவங்கள் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்டவை. பாபா கேதர்நாத்தின் அடைக்கலத்தில் எனது உணர்வு இப்படிதான் உள்ளது. ஆன்மிகம், மதம் ஆகியவை ஒரே மாதிரியான கருத்துகளுடன் மட்டுமே தொடர்பு படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் இந்திய தத்துவம் மனித நலன் குறித்து பேசுகிறது.
வாழ்க்கை என்பது முழுமையான பாதையில் பார்க்கிறது. இந்த உண்மையை பொதுமக்களுக்கு உணர்த்தும் பணியில் ஆதி சங்கராச்சாரியார் ஈடுபட்டார். சமூகதாய நன்மைக்காக ஆதிசங்கரர் புதிய குறிக்கோளுடன் செயல்பட்டார். கடந்த 2013ம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு பின்னர் பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்ப நிலையில், கேதார் புரியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளுக்காக பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். அப்போது ஏற்பட்ட சேதம் நினைத்துகூட பார்க்க முடியாதது. இதன் காரணமாக மீண்டும் கேதர்நாத் மீளுமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்தது. ஆனால் கேதர்நாத் முன்பைவிட மகிமையுடன் நிற்கிறது. மேலும் இந்திய கலாசாரத்தை பார்த்து உலகமே வியக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Source: Maalaimalar
Image Courtesy: ANI