பொய் வாக்குறுதிக்கு பெயர் பெற்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர் - பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சி ஒரு பொழுதும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தராது பிரதமர் குற்றச்சாட்டு.
By : Bharathi Latha
ஹிமாச்சல் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களை இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரச்சாரத்தில் அனல் பறக்கும் பேச்சுகள் கிளம்புகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் நேற்று அங்கு பிரசாரத்தில் பா.ஜ.க வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், இந்த மாநிலம் குறைவாக எண்ணிக்கையில் மூன்று அல்லது நான்கு எம்.பிக்களை மட்டுமே மக்களவைக்கு தேர்வு செய்து அனுப்புவதால் காங்கிரஸ் கட்சி எப்பொழுதுமே புறக்கணித்து வந்திருக்கிறது.
நாம் அனைவரும் ஒன்றுபட்ட இந்த மாநிலத்தில் முன்னோக்கி அழைத்து செல்வோம். நாம் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம். பா.ஜ.கவின் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவோம். இந்த மாநிலம் எந்த ஒரு கட்சியையும் தொடர்ந்து இரண்டு முறை ஆள்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. பா.ஜ.க இங்கு ஆட்சியில் உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு ஒரு வாய்ப்பையும் விட்டுக் கூடாது. காங்கிரஸ் கட்சி உறுபொழுதும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தந்தது கிடையாது.
இதனால்தான் மாநிலம் காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி, இந்த கட்சி தனது முதல் ஊழலை நாட்டின் பாதுகாப்பு துறையில் செய்துள்ளது. எனது ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சி இராணுவ தொடர்பான கொள்முதல்களில் கமிஷன் பெற்றது. பல்கலைக்கழகங்களில் கோடி கணக்கில் ஊழல் செய்துள்ளது. இமாச்சல விரைவான முன்னேற்றம் நிலையான அடுத்த 25 ஆண்டுகள் இந்த மாநிலத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும். பொய் வாக்குறுதிகளை தந்து மட்டும் காங்கிரஸ் கட்சிகள் ஏமாற்ற பார்க்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
Input & Image courtesy: Polimer News