சாதாரண குடிமக்களை போன்று தானும் காத்திருந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி.!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இன்று பிரதமர் மோடி தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இன்று பிரதமர் மோடி தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் இனறு 60 வயதுடையவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இணை நோய் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி பிரதமர் மோடியும் தனக்கான நேரம் வரும்வரை காத்திருந்தார். இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
பிரதமராக இருந்தாலும் தானும் சாதாரண குடிமக்களை போன்று காத்திருந்து தனக்கான நேரம் வந்த பின்னர்தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் முதலில் அவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பின்னர்தான் குடிமக்களுக்கே போடுங்கள் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் புதிய இந்தியாவில் முதலில் குடிமக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருபவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
