தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை இந்தியா முழுவதும் தெரியப்படுத்திய பிரதமர் மோடி!
By : Thangavelu
பிரதமர் நரேந்திர மோடி இன்று 89வது மன் கி பாத் நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின்போது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பி வைத்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டி அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது; நமது நாட்டில் வெவ்வேறு மொழிகள், பேச்சு வழக்கங்கள் உள்ளது. குறிப்பாக நமது நாட்டில் பன்முகத்தன்மையை வலுப்படுத்துவதற்காக உழைப்பவர்கள் பலர் நாட்டில் உள்ளனர். மேலும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி டுடு என்பவர் இந்திய அரசியலமைப்பை சந்தாலி சமூகத்திற்காக ஓல் சிக்கி எழுத்தில் மொழி பெயர்த்துள்ளார். எதிர்காலங்களில் இந்தியாவில் ஆரம்ப தொழில் நிறுவனங்கள் புதிய உயரங்களை எட்டுவதைக் காண்போம் என்றார்.
மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தரும் சார் தாம் யாத்திரை நடைபெற்று வருகிறது. கேதார்நாத் யாத்ரீகர்கள் சில யாத்ரீகர்களால் குப்பைகளை வீசியதால் வருத்தமடைந்ததை நான் பார்த்துள்ளேன். அதாவது தாங்கள் தங்கியிருக்கும் பகுதிகளையும் யாத்திரையின்போது சுத்தம் செய்கின்றனர்.
குறிப்பாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு எனது நன்றி. தமிழகத்தில் பல மகளிர் சுய உதவிக் குழுவினர் இணைந்து முக்கிய இடங்களில் விற்பனை நிலையங்களை அமைத்து வருகின்றனர். சமூகத்தில் சுயம் மந்திரம் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அப்படி ஒருவரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராம் பூபால் ரெட்டி, பெண் குழந்தைகளின் கல்விக்காக தனது வருமானத்தை நன்கொடையாக அளித்திருக்கிறார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Source: Maalaimalar
Image Courtesy:The Hindu