பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: வேளாண் சட்டம் பற்றி முக்கிய விவாதங்கள் நடைபெற வாய்ப்பு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகின்ற 29ம் தேதி கூடுகிறது. இதனிடையே வேளாண் சட்டத்தை மீண்டும் திரும்பப் பெறப்படும் என்று சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
By : Thangavelu
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகின்ற 29ம் தேதி கூடுகிறது. இதனிடையே வேளாண் சட்டத்தை மீண்டும் திரும்பப் பெறப்படும் என்று சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (நவம்பர் 24) கூடுகிறது. இதில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பபெறுவதற்கான ஒப்புதல் பெறப்படும் என கூறப்படுகிறது.
மேலும், வருகின்ற நாடாளுமன்றத் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசத்தில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காத்தான் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது டெல்லியில் வேண்டும் என்றே போலி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Maalaimalar
Image Courtesy: Twiter