Begin typing your search above and press return to search.
கொரோனா தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி 27'ம் தேதி முக்கிய ஆலோசனை! மீண்டும் லாக்டவுனா?

By :
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,54,952 ஆக அதிகரித்துள்ளது.
அதே போன்று கொரோனா தொற்று பாதிப்பால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 15,079 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில், உயர்ந்து வரும் கொரோனா தொற்று குறித்து பிரதமர் மோடி ஏப்ரல் 27ம் தேதி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.
Source: Maalaimalar
Image Courtesy: Deccan Herald
Next Story