கொரோனா ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!
தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று ஆலோசனையில் ஈடபட்டு வருகிறார்.

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று ஆலோசனையில் ஈடபட்டு வருகிறார்.
அதே போன்று தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலாள ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணைய ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை அனைத்து மாநில அரசுகளும் விரைந்து நடத்தி முடிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.