Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தானில் ‘அமைதியின் சிலை’ - பிரதமர் மோடி திறந்து வைத்தார்.!

ராஜஸ்தானில் ‘அமைதியின் சிலை’ - பிரதமர் மோடி திறந்து வைத்தார்.!

ராஜஸ்தானில் ‘அமைதியின் சிலை’ - பிரதமர் மோடி திறந்து வைத்தார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Nov 2020 5:06 PM GMT

ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில், ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ் என்ற ஜைன மதத்துறவியின் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ‘அமைதியின் சிலையை’ காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ் (1870-1954), ஜைனத்துறவியாக எளிய வாழ்க்கையை வாழ்ந்து, மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றி அதனை மக்களுக்கு போதித்து வாழ்ந்து வந்தவர் ஆவார். மக்களின் நலனுக்காகவும், கல்வியை பரப்புவதற்காகவும், சமூக தீமைகளை எதிர்க்கும் வகையிலும் பல்வேறு கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பக்தி பாடல்களை இயற்றியுள்ளார்.

மேலும் சுதேசி கொள்கையை வலியுறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கும் தீவிர ஆதரவளித்தார். அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள சிலைக்கு, ‘அமைதியின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 151 அங்குலம் உயரமுள்ள இந்த சிலை, 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதில் செம்பு அதிக அளவில் இடம் பெற்றுள்ளது.

இந்த சிலையை டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவருடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடியுடன் உரையாடிய ஜைன மதத்துறவிகள், அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News