தூய்மை இந்தியா திட்டம்! நகர்ப்புறத்தின் '2.0' பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வேலையில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் நாள் தூய்மை இந்தியா திட்டத்தை முதன் முதலில் தொடங்கி வைத்தார்.
By : Thangavelu

இந்தியா முழுவதும் குப்பை இல்லாத நாடாக மாற்றுவது இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதனை ஒரு இயக்கமாக மக்கள் எடுத்து செல்ல வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இதற்காக பிரபல நடிகர்கள் தூதர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இதன் பின்னர் ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறியது.
இந்நிலையில், குப்பை இல்லாத நகரங்களை உருவாக்குகின்ற முயற்சியில் தூய்மை இந்தியாவின் நகர்ப்புறம் 2.0 திட்டத்தினை பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைக்கிறார். மேலும் தண்ணீர் பாதுகாப்பு திட்டமான அம்ருட் 2.0 திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Polimer
Image Courtesy: The Indian Express