உஜ்வாலா திட்டம் மூலம் 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள்: மத்திய அரசின் மைல்கல் சாதனை!
உஜ்வாலா திட்டம் மூலம் 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தற்போது மக்களவையில் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக வருமான வரி செலுத்துவோர் அனைவரின் கவனமும் தற்போதைய பட்ஜெட் தாக்கல் மீது இருந்து கொண்டு இருந்தது என்று கூறலாம். உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது. G20 தலைமை பொறுப்பின் இப்போது இந்தியா மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த குரலாகவும் தற்போது போராடி வருவதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது. 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.