Kathir News
Begin typing your search above and press return to search.

மங்களூர் குண்டு வைப்பு குற்றவாளி கவலைக்கிடம்: வாக்குமூலம் பெற முடியாமல் போலீசார் அவதி!

குக்கரில் குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக மங்களூரு குற்றவாளி இடம் வாக்குமூலம் பெற முடியாமல் போலீசார் தவிக்கிறார்கள்.

மங்களூர் குண்டு வைப்பு குற்றவாளி கவலைக்கிடம்: வாக்குமூலம் பெற முடியாமல் போலீசார் அவதி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Nov 2022 3:22 AM GMT

கர்நாடக மாநிலம் மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக தினமும் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கார் குண்டு வெடிகுண்டை மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் வைத்து வெடிக்க வேண்டும். அதை இந்து பயங்கரவாதமாக காட்ட ஷாரிக் முயற்சி செய்து இருக்கிறார். இதற்காகவே தன்னை இந்துவாக அடையாளப்படுத்தி வந்துள்ளார். மேலும் குண்டு வெடித்த நாளில் அவர் காவி சட்டை அணிந்திருந்தார் இருப்பினும் இடுப்பிலும் காவி துண்டு அணிந்திருக்கிறார்.


இதற்கிடையில் 45 சதவீத தீக்காயங்களுடன் கனக காவடி உள்ள பார்தர் முலார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரால் பேச முடியவில்லை ஒரு கண் தெரியவில்லை. மற்றொரு கண்ணை திறக்க முடியவில்லை, கை கடிதத்தால் எதுவும் எழுத முடியவில்லை. இதனால் அவரிடம் இருந்து போலீசானால் வாக்குமூலம் பெற முடியவில்லை. கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் உடல்நிலை மேலும் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.


ஷாரிக் எந்த மாதிரியான பயங்கரவாத செயல்களை செய்து வந்தார். அவரது அடுத்த திட்டம் என்ன? அவருடன் இருப்பவர்கள் யார்? அவருக்கு யாரை அடையாளம் கொடுத்தனர்? எந்த விதமான பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பது என்பது குறித்தன தகவல்களை தெரிந்து கொள்ள போலீசார் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அவருடைய உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது. எட்டு பேர் அடங்கிய டாக்டர் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். தற்போது நிலையில் அவர் குணமாக ஒரு மாதத்திற்கு மேலாகும் என்று கூறப்படுகிறது.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News