PFI பயங்கரவாதிகளுக்கு உதவிய கேரளா போலீஸ் - ஸ்லீப்பர் செல்கள் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்!

By : Kathir Webdesk
தீவிரவாத குழுக்களுக்கு முக்கியமான தகவல்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கேரள காவல்துறையைச் சேர்ந்த 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மூணாறு காவல் நிலையத்தில் கணினி மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் கொடுத்ததாக இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் போலீஸ் அதிகாரிகள் பிவி அலியார், பிஎஸ் ரியாஸ், அப்துல் சமத் ஆகியோர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) ஜிஹாதிகளுக்கு முக்கியமான தகவல்களை கசிய விட்டனர். மாவட்ட காவல்துறை தலைவர் கருப்பசாமி, உத்தரவின் பேரில் மூவரது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சைபர் செல்லிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மூணாறு துணை எஸ்பியிடம் இருந்து மாவட்ட காவல்துறை தலைவர் அறிக்கை பெற்றுள்ளார்.
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, சேவை விதிகளை மீறியதற்காக கடந்த சில மாதங்களில் மூன்று முறை காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டிய சூழ்நிலைகள் அரசுக்குத் தள்ளப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவரின் முகநூல் பதிவைப் பகிர்ந்த பெண் அதிகாரி ஒருவர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கேரள காவல்துறைக்குள் ஜிகாதிகள் ஊடுருவியதாக நம்பப்படுகிறது.
Input From: Hindupost
