இனி அரசியல் கட்சிகள் இஷ்டத்திற்கு நன்கொடை பெற முடியாது - வரும் புதிய கட்டுப்பாடுகள்!
அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெற புதிய கட்டுப்பாடு மத்திய சட்ட அமைச்சர் அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் யோசனை.
By : Bharathi Latha
அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை குறைக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சரவை கமிஷன் யோசனை தெரிவித்துள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் வரை ரொக்கமாக நன்கொடை பெறலாம். அதற்கு மேல் காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலமாக மட்டுமே நன்கொடை பெற முடியும். மேலும் 20,000 த்துக்கு மேல் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கையின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
சில கட்சிகள் 20 ஆயிரத்துக்கும் மேல் நன்கொடை பெறவில்லை என்று அறிக்கை அளிக்கின்றனர். ஆனால் இருபதாயிரத்திற்கு குறைவாக ஒவ்வொருவரிடமும் ரொக்கமாக நன்கொடை பெற்று பெரும் பணம் திரட்டப் படுகிறது. இந்த முறை கேடுகளை தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளும் மாறு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் கமிஷன் யோசனையை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்தியில் சட்டம் மந்திரி கிரண் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜு குமார், கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். அதில் அரசியல் கட்சிகள் தூக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சி பரம்பை 20 ஆயிரத்தில் இருந்து ₹. 2,000 ஆக குறைக்குமாறு அவர் யோசனை தெரிவித்துள்ளார். அப்படி செய்தால் 2,000 மேல் பெற்ற அனைத்தும் அனைத்து கட்சிகளும் நன்கொடை விவரங்களை அரசியல் கட்சி தேர்தல் கமிஷனரிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் நன்கொடை பெறுவதில் வெளிப்படையான நடத்தை உருவாகும் என்றும் கருதப்படுகிறது.
Input & Image courtesy: Thanthi News