Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியல் காத்திருக்கலாம், ஆனால் வளர்ச்சி காத்திருக்கலாமா? பிரதமர் உரை!

அரசியல் காத்திருக்கலாம், ஆனால் வளர்ச்சி காத்திருக்கலாமா? பிரதமர் உரை!

அரசியல் காத்திருக்கலாம், ஆனால் வளர்ச்சி காத்திருக்கலாமா? பிரதமர் உரை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Dec 2020 5:17 PM GMT

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதன்மை விருந்தினராக வீடியோ கான்பெரன்ஸ் முறையில் கலந்து கொண்டார்.

அங்கு பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை பார்வையிட்ட அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். கடந்த 56 ஆண்டுகளில் முதல் தடவையாக இந்தியப் பிரதமர் ஒருவர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடி சிறப்பு அஞ்சல் முத்திரையையும் வெளியிட்டதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக அதிபர் சையத்னா முப்தால் சைபுதீன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

மோடியிடம் தனது நன்றியைத் தெரிவித்த அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூர், பல்கலைக்கழகத்தின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமருக்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சமூகம் நன்றி தெரிவிக்கிறது எனக் கூறினார்.

“ஒரு நூற்றாண்டு கொண்டாட்டம் என்பது எந்தவொரு பல்கலைக்கழக வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வாகும். கொரோனா நடைமுறையின் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி இந்த நிகழ்வை நாங்கள் கொண்டாடுகிறோம். வெபினார்கள், கருத்தரங்குகள் மற்றும் சிம்போசியங்கள் நடைபெறுகின்றன.” என பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் உமர் சலீம் கூறினார்.

முன்னதாக 1964’ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கடைசியாக கலந்துகொண்டார். அவருக்கு முன், பிரதமர் ஜவஹர்லால் நேரு நான்கு முறை சென்றுள்ளார். 1948’ஆம் ஆண்டில் அவர் முதன்முறையாக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார். அப்போது அவருக்கு வருடாந்திர மாநாட்டில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து 1955, 1960 மற்றும் 1963 ஆம் ஆண்டுகளில் வருகை தந்தார்.

முகமதியன் ஆங்கிலோ-ஓரியண்டல் (MAO) கல்லூரியை மத்திய பல்கலைக்கழகத்தின் நிலைக்கு உயர்த்துவதன் மூலம் இந்திய சட்டமன்றக் குழுவின் சட்டத்தின் மூலம் 1920’இல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் என ஒரு பல்கலைக்கழகமாக மாறியது. எம்.ஏ.ஓ கல்லூரி 1877’ஆம் ஆண்டில் சர் சையத் அஹ்மத் கானால் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசத்தின் அலிகார் நகரில் 467.6 ஹெக்டேர் நிலப்பரப்பில் பல்கலைக்கழக வளாகம் உள்ளது. மேலும் கேரளாவின் மலப்புரம், மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்-ஜாங்கிபூர் மற்றும் பீகாரின் கிஷன்கஞ்ச் ஆகிய பகுதிகளில் மூன்று வளாக மையங்களும் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, அரசியல் என்பது எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றும், ஆனால் வளர்ச்சி அப்படியல்ல என்றும் அது நமக்காக காத்திருக்காது என்றும் கூறினார். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வதில் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தும் தடங்கல்களை மோடி மறைமுகமாகக் குறிப்பிட்டு, அனைவரும் வளர்ச்சி குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News