Kathir News
Begin typing your search above and press return to search.

'செல்வமகள் திட்டம்'  போலவே ஆண் பிள்ளைகளுக்கும் 'பொன்மகன் சேமிப்பு திட்டம்' : தபால் அலுவலகங்களில் நல்ல வரவேற்பு !

'செல்வமகள் திட்டம்'  போலவே ஆண் பிள்ளைகளுக்கும் 'பொன்மகன் சேமிப்பு திட்டம்' : தபால் அலுவலகங்களில் நல்ல வரவேற்பு !

செல்வமகள் திட்டம்  போலவே ஆண் பிள்ளைகளுக்கும் பொன்மகன் சேமிப்பு திட்டம் : தபால் அலுவலகங்களில் நல்ல வரவேற்பு !

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  4 Dec 2020 10:14 AM GMT

ஏற்கனவே நரேந்திரமோடி அவர்களின் அரசு பெண் குழந்தைகள் பெற்றுள்ள குடும்பங்களுக்கு உதவும் வகையிலும், அந்த பெண்ணின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு உதவும் வகையிலும் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற ஒரு புரட்சிகரமான அதிக லாபமுள்ள சேமிப்பு திட்டத்தை கொண்டு வந்தது.

அந்த திட்டத்தில் நாட்டில் கோடிக்கணக்கான குடும்பங்கள் இணைந்துள்ளன. இநிலையில் பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் தான் “பொன்மகன் சேமிப்பு திட்டம்”.

இதன் மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையால் தபால் அலுவலகங்கள் மற்றும் தபால் அலுவலக வங்கிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண் குழந்தையின் வயது 10 வயதிற்கு மேல் இருந்தால், அந்த குழந்தையின் பெயரிலேயே சேமிப்பு கணக்கை துவங்கலாம். அதேபோல் குழந்தையின் வயது 10 வயதிற்கு குறைவாக இருந்தால் பெற்றோர் பெயருடன் இணைப்பு சேமிப்பு கணக்காக துவங்கலாம்.

பொதுவாக இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் ஆண்டுதோறும் மாறுபடுகிறது. தற்போதைய வட்டி விகிதம் 7.8%. இது மற்ற திட்டங்களோடு ஒப்பிடுகையில் சற்று அதிகம் தான். அதோடு இந்த திட்டத்தில் அஞ்சல் அலுவலகத்தில் அனைத்து பரிவர்த்தனையும் செய்து கொள்ள முடியும் என்பதால், கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பொன்மகன் சேமிப்பு திட்டக் கணக்கில் போடப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும் நீங்கள் இந்த கணக்கு தொடங்கியதிலிருந்து 7வது ஆண்டு முதல் கணிசமான தொகையினை பெற்றும் கொள்ளும் வசதியும் உண்டு.

அதே போல இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்து 5 ஆண்டுகளுக்கு நீங்கள் தேவைக்கேற்ப அதிகரித்து கொள்ளலாம்.

அதேசமயம், பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கான உரிய காரணத்தை கூற வேண்டும். இந்த திட்டத்திலும் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் முதலீடு செய்ய தொடங்கியதிலிருந்து மூன்றாவது நிதியாண்டுக்குப் பின்னர் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த திட்டம் இந்திய அரசின் தபால் துறை மூலம் இயக்கப்படுவதால் முதலீட்டு பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு. அதோடு இதில் கணிசமான லாபமும் உண்டு. இந்த காரணங்களால்தான் மக்களிடையே இந்த திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News