மக்கள் தொகை அடர்த்தி.. மலேரியா பாதிப்பு குறையும் ஒரே நாடு இந்தியா.. உலக சுகாதார நிறுவனம் பாராட்டு.!
மக்கள் தொகை அடர்த்தி.. மலேரியா பாதிப்பு குறையும் ஒரே நாடு இந்தியா.. உலக சுகாதார நிறுவனம் பாராட்டு.!

130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. மலேரியா பாதிப்பு குறைந்து வரும் ஒரே நாடு இந்தியா என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக மலேரியா அறிக்கை 2020ஐ, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் அம்சங்களை பார்ப்போம்.
மலேரியா பாதிப்பு இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டைவிட, 2019ம் ஆண்டில் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. அதிகமான மக்கள் தொகையுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு குறையும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான் என்று கூறியுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு 21.27 சதவீதமும், உயிரிழப்பு 20 சதவீதமும் குறைந்துள்ளது.
இது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தியாவில் மலேரியா ஒழிப்பு நடவடிக்கை, கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இதனை சுகாதாரத்துறை அமைச்சகம் 2016ம் ஆண்டு தீவிரப்படுத்தியது. இதுற்காக மலேரியா ஒழிப்பு தேசிய திட்டம் தொடங்கப்பட்டது.
2017 முதல் 2022 வரையிலான மலேரிய ஒழிப்புக்கான தேசிய உத்தி திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இதனால் முதல் 2 ஆண்டுகள் உயிரிழப்பு 27.7 சதவீதம் மற்றும் 49.5 சதவீதம் குறைந்தது. 2015ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு 11,69,261 ஆகவும், உயிரிழப்பு 385ஆகவும் இருந்தது. ஆனால் 2017ம் ஆண்டு பாதிப்பு 8,44,558 ஆகவும், உயிரிழப்பு 194 ஆகவும் குறைந்துள்ளது.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு வகையான நோய்களை கட்டுப்படுத்தியுள்ளார். அதிகமான நிதியை சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.