Kathir News
Begin typing your search above and press return to search.

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு.. புதிய உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு.!

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு.. புதிய உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு.!

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு.. புதிய உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Nov 2020 8:21 AM GMT

தபால் துறை சார்பில் நடத்தப்படும் வங்கி சேவையில் சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 ஆக இருந்து வந்தது. தற்போது இந்த தொகையில் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த விதிமுறை கடந்த டிசம்பர் 12-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

ஏற்கனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள வரும் டிசம்பர் 11-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத பட்சத்தில் மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத்தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும்.

இந்த தகவல் சென்னை மத்திய கோட்டத்தின் தபால் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News