Begin typing your search above and press return to search.
நாடு முழுவதும் முதுகலை நீட் தேர்வு தொடங்கியது !
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய முகவை நடத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக முதுகலை நீட் தேர்வு தள்ளிப் வைக்கப்பட்டது.
By : Thangavelu

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், செப்டம்பர் 11ம் தேதி முதுகலை நீட் தேர்வு நுழைவுத் தேர்வும், இளங்களை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதியும் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், எம்.டி., எம்.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான முதுநிலை நீட்தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. 260 நகரங்களில் சுமார் 800 மையங்களில் நடக்கின்றது.
Source, Image Courtesy: TopTamilNews
Next Story