மக்களின் மிகப்பெரிய நல்வாழ்வை விரும்புகின்றவர் பிரதமர் : அசாம் முதலமைச்சர் புகழாரம்.!
மக்களின் மிகப்பெரிய நல்வாழ்வை விரும்புகின்றவர் பிரதமர் : அசாம் முதலமைச்சர் புகழாரம்.!
By : Bharathi Latha
பிரதமர் அலுவலக வெளியீட்டின்படி, மாநிலத்தின் பழங்குடியின மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை கணக்கில் எடுத்துக்கொண்டு, அசாம் அரசாங்கம் பூர்வீக மக்களின் நில உரிமைகளைப் பாதுகாப்பதில் புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்துடன் ஒரு விரிவான புதிய நிலக் கொள்கையை கொண்டு வந்தது. "அசாம் பழங்குடியினருக்கு பட்டா ஒதுக்கீடு சான்றிதழ்கள் வழங்கப்படுவது அவர்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அசாமில் 2016’ஆம் ஆண்டில் 5.75 லட்சம் நிலமற்ற குடும்பங்கள் இருந்தன.
மே 2016 முதல் தற்போதைய அரசு 2.28 லட்சம் நில பட்டாக்களுக்கான ஒதுக்கீட்டை விநியோகித்துள்ளது. ஜனவரி 23 அன்று நடைபெறும் விழா இந்த செயல்முறையின் அடுத்த கட்டத்தை குறிக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், பிரதமர் மோடி அசாம் மற்றும் அதன் மக்களின் மிகப்பெரிய நல்வாழ்வை விரும்புபவர் என்று கூறினார். அசாம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு அவரது ஆதரவு காரணமாகும் என்றும் அவர் கூறினார்.