Kathir News
Begin typing your search above and press return to search.

அல்லாவை வேண்டினால் கணிதம் வரும்: இந்து மாணவிகளை கட்டாயப்படுத்தும் முஸ்லீம் ஆசிரியை!

பெங்களூருவில் உள்ள பிடிஎம் லேஅவுட் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில், கணிதம் வரவேண்டும் என்றால் அல்லாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று இந்து மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த இஸ்லாமிய ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அல்லாவை வேண்டினால் கணிதம் வரும்: இந்து மாணவிகளை கட்டாயப்படுத்தும் முஸ்லீம் ஆசிரியை!

ThangaveluBy : Thangavelu

  |  5 Jan 2022 11:23 AM GMT

பெங்களூருவில் உள்ள பிடிஎம் லேஅவுட் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில், கணிதம் வரவேண்டும் என்றால் அல்லாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று இந்து மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த இஸ்லாமிய ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பிடிஎம் லேஅவுட் பகுதியில் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைவரும் தங்களின் பிள்ளைகளை அப்பள்ளியில் சேர்த்துள்ளனர். நல்ல பாடங்களை கற்றுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பெற்றோர்களும் இருந்து வருவது வழக்கம்.

இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளியில் கணிதம் எடுத்து வந்த இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு காரியத்தை செய்துள்ளார். அதாவது கணிதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் அல்லாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று இந்து மாணவிகளை கட்டாயப்படுத்தியுள்ளார். மாணவிகள் நாங்கள் இந்து எங்களுக்கு இது போன்ற பிரார்த்தனைகள் தெரியாது என கூறியுள்ளனர். ஆனாலும் விடாத ஆசிரியை மாணவிகளின் கைகளை கின்னம் போன்று வைத்துக்கொண்டு முகத்தின் மீது தேய்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இது பற்றிய வீடியோ வெளியாகி தற்போது கர்நாடகா மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது. இந்து மாணவிகளுக்கு இஸ்லாமிய பாடத்தை ஏன் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்து. இது தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த பத்திரிகையாளர் சிரு பட் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு இந்து அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது. அரசு உடனடியாக பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

Source: The commune

Image Courtesy: Sputnik News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News