Kathir News
Begin typing your search above and press return to search.

ஐசியூவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

மருத்துவர்களின் பரிந்துரையின்படி மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு கடந்த 30ம் தேதி இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

ஐசியூவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!
X

ThangaveluBy : Thangavelu

  |  3 April 2021 1:16 PM IST

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மருத்துவர்களின் பரிந்துரையின்படி மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு கடந்த 30ம் தேதி இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.




இதனை தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த நிலையில், தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது ஐசியூவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News