Kathir News
Begin typing your search above and press return to search.

ஆரோக்கியம், அமைதி, வளத்தை கொடுக்கட்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து.!

தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள்.

ஆரோக்கியம், அமைதி, வளத்தை கொடுக்கட்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 April 2021 10:57 AM IST

தமிழ்நாடு, கேரளா, அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இன்று தங்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இதனையொட்டி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மற்றும் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.





இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News