அப்பாவி OBCக்கள் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டம்.! பின்னணியில் கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்கள்?
அப்பாவி OBCக்கள் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டம்.! பின்னணியில் கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்கள்?

By : Saffron Mom
கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம் இந்தியாவின் மீதும் இந்துக் கலாச்சாரத்தின் மீதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சாரம் குறிப்பாக தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா பிரதேஷ் மற்றும் தெலுங்கானாவில் பிரதானமாக பிரச்சினைகளை அதிகரித்து வருகின்றன.
தெலுங்கானாவின் சங்கம் ஸ்ரீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஹிந்து தலித்களுக்கும் அதிலிருந்து மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், அப்பாவி OBCகள் 18 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் இந்த கிராமத்தைச் சேர்ந்த தலித்துகள், அந்த கிராமத்தை சேர்ந்த கிராம முன்னேற்ற கமிட்டியினர் (VDC) SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்கு காரணமாக தாங்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார் அளித்தனர். அப்பொழுது வந்த செய்திகளின் படி, தசரா இந்து பண்டிகை கொண்டாட்டத்தில் இந்த சர்ச்சை ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது.
கடந்த வருடம் அக்டோபர் 25-ஆம் தேதி, சில தலித் இளைஞர்கள் அம்பேத்கர் சிலையின் அருகில் தசரா பண்டிகை நடப்பதை எதிர்த்து பிரச்சினையைக் கிளப்பினர். அப்பொழுது எதிர்ப்புகளை தெரிவித்ததற்காக, கிராம குழு (VDC) தங்களை ஒதுக்கி வைத்து விட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
தலித் குடும்பங்கள் மேலும் கூறுகையில், VDC ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாகவும், கடந்த சில மாதங்களாக காலனியில் அத்தியாவசிய சேவைகளைப் பெறக் கூட தங்களை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, VDC கிராம குழுவின் உறுப்பினர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாருக்கு பிறகு தலித் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, 'புறக்கணிக்கப்பட்ட' தலித் குடும்பங்களுக்கு 'நீதி' வேண்டி போராடினர்.
இந்த போராட்டங்களுக்கு பிறகு OBC வகுப்பைச் சேர்ந்த 18 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு டிசம்பர் 2020 முதல் போலீஸ் கஸ்டடியில் உள்ளனர்.
இந்நிலையில் பிரச்சினையின் ஆழத்தை அறிய ஜனவரி 2020ல் தேசிய பட்டியலின ஜாதி பாதுகாப்பு சமிதி (NSCRPS) அங்கே சென்றது. அப்பொழுதுதான் இந்த பிரச்சினைக்கான முழு காரணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பிளவுகளை உண்டாக்குவதற்காக, தாங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக ஒரு போலி கதையை உருவாக்குவதில் கிறிஸ்தவ சுவிஷேகர்களின் பங்கு வெளிப்பட்டது.
Mahisasur is dalit god - This narrative finds its devastating impact on 18 innocent OBCs who were arrested under SC atrocity act in a dispute over burning of Mahisasura on Dasera.
— DharmaRakshak (@oldhandhyd) January 12, 2021
War on Hindu civilisation is on, be aware of it.
Sangem Srirampur, Jagtial, Telangana. pic.twitter.com/L8nYkUEk8L
அந்த கிராமத்தை அடைந்ததும் பல சமூகங்களை சேர்ந்த கிராமவாசிகளிடம் அவ்வமைப்பு பேச்சு நடத்தியது. SC சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உண்மை கண்டறியும் குழுவிடம் சாட்சி அளித்தார்.
அவர் கூறும் போது, அந்த கிராமத்தில் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களும் ஒதுக்கி வைக்கப்படவில்லை என்றும் அந்த கிராமத்தின் நல்லிணக்கத்தில் தேவையில்லாமல் வெளியாட்கள் பிரச்சினையை உருவாக்குவதாகவும் தெரிவித்தார். கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியவர்களை கொண்டு OBCக்களின் மீது பொய்வழக்குகள் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேற்கண்ட இந்த வீடியோவில் OBC வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தன் கணவரும் தன் குடும்ப உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாகவும் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார். தசரா பண்டிகையிம் போது தாங்கள் பாரம்பரியமாக வெடிவைத்து கொண்டாடியதாகவும், அந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டு 10 முதல் 12 நாட்கள் ஏற்கனவே ஆகி விட்டதாகவும் அவர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.
இந்த உண்மை கண்டறியும் குழு பல அதிர்ச்சி தரும் செய்திகளை கண்டறிந்துள்ளது. மதம் மாறிய கிறிஸ்தவர்கள் அப்பாவி ஓபிசிக்கள் மற்றும் ஹிந்து SCக்களை அரசியல் காரணங்களுக்காக குறிவைப்பது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 50 வருடங்களாக தலித்களும் ஓபிசிக்களும் இங்கே எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததும் அங்கே இருந்த 12 குடும்பங்கள் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பிறகு, இந்து OBC/ SCகளை குறிவைப்பது என பிரச்சனைகள் தொடர்ந்து உள்ளது.

கிறிஸ்தவ எவஞ்சலிஸ்ட்கள் சார்பாக அவர்கள் பல தந்திரங்களை கையாண்டு உள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவி இந்துக்களை தாக்கும் செயல் தொடர்வதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து திருவிழாக்களின் போது வேண்டுமென்றே பிரச்சினைகளை கிளப்பி, நாத்திகம், அம்பேத்கரிசம் ஆகியவற்றை இந்துக்களுக்கு எதிராகவே பயன்படுத்துவதும் என அட்டூழியங்கள் தொடர்ந்து வருகின்றன.
அம்பேத்கரின் சிலை அருகே தசரா நடக்கக்கூடாது என்று தலித் குழுக்கள் ஆட்சேபனைகளை எழுப்பிய போதும், தெலுங்கானா அரசாங்கமே அதே இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிகழ்த்திய போது அதற்கு இந்த தலித் குடும்பங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
With Inputs from Hindu Post.
