Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகா: மதமாற்ற தடை சட்டம் இருந்தும் மத மாற்றத்தில் ஈடுப்பட்ட பாதிரியார் கைது: இந்து அமைப்பு வரவேற்பு!

கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், பாதிரியார் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரை போலீசார் மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா: மதமாற்ற தடை சட்டம் இருந்தும் மத மாற்றத்தில் ஈடுப்பட்ட பாதிரியார் கைது: இந்து அமைப்பு வரவேற்பு!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 Oct 2021 5:03 PM GMT

கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், பாதிரியார் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரை போலீசார் மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், உப்பள்ளி டவுன் பைரதேவராகொப்பா பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இயங்கி வரும் நிலையில், கடந்த 17ம் தேதி தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அதேப் பகுதியை சேர்ந்த பஜ்ரங்கதள அமைப்பினர் சர்ச்சுக்குள் புகுந்து பாதிரியார் சோமு அவராதி மற்றும் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பாதிரியார் பஜ்ரங்கதள அமைப்பினர் மீது நவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை விசாரணை நடத்திய போலீசார் பஜ்ரங்தள அமைப்பினரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, பாதிரியார் சோமு அவராதி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி வருகிறார். இதன் காரணமாகத்தான் சர்ச்சுக்குள் புகுந்து நாங்கள் கண்டனத்தை தெரிவித்தோம் என்றனர்.

இதனிடையே மதமாற்ற முயற்சியில் ஈடுபடும் பாதிரியார் சோமு அவராதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் பாதிரியாரை கைது செய்யாமல் விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்துக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி போலீசார் பாதிரியார் சோமுவை மதமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில் அடிக்கடி பாதிரியார்கள் சட்டத்திற்கு புறம்பாக மதமாற்றும் வேலையில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்து அமைப்பினர் வைத்து வருகின்றனர்.

Source: Daily Thanthi

Image Courtesy:Gallup News


Next Story
கதிர் தொகுப்பு
Trending News