கவுன்சிலிங்கிற்காக சர்ச்சில் விட்டு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்!

By : Thangavelu
கேரளாவில் சரியாக படிக்கவில்லை என்பதற்காக சர்ச்சில் கவுன்சிலிங் கொடுப்பதற்காக அழைத்து செல்லப்பட்ட சிறுமியை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் கூடல் என்ற இடத்தில் புனித மேரி சிரியன் ஆர்த்தோடாக்ஸ் சர்ச் ஒன்று உள்ளது. அதில் பாதிரியாராக பாண்ட்சன் ஜான் என்பவர் உள்ளார். இதனிடையே 17 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி சரியாக படிப்பதில்லை என்று பாதிரியார் பாண்ட்சன் ஜானிடம் கவுன்சிலிங்கிற்காக பெற்றோர் அழைத்து விட்டு சென்றுள்ளனர்.
அப்போது இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாதிரியார் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி சிறுமி பெற்றோரிடம் தகவல் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பாதிரியாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கவுன்சிலிங்கிற்காக அழைத்து வரப்பட்ட சிறுமியை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கேராளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi
