பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் நீட்டிப்பு - வரப்போகும் 40 லட்சம் வேலைகள்
By : Thangavelu
பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது மேலும், 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேலை இல்லாத இளைஞர்களுக்கு நாடு முழுவதும், விவசாயம் அல்லது குறு நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே இத்திட்டம் 2026ம் ஆண்டு வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் புதிய திட்டங்களை பெறுவதற்கு பிரதம மந்திரி திட்டத்தின் சார்பில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடங்கியதில் இருந்து சுமார் 7.8 லட்சம் குறு நிறுவனங்களுக்கு ரூ.19,995 கோடி கடன் மானியத்துடன் சுமார் 64 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளது. இதில் 80 சதவீதம் கிராமப்புறங்களிலும், 50 சதவீத நிறுவனங்கள் பட்டியலின விண்ணப்பதாரர்களுக்கு வழங்கியுள்ளது.
மேலும், இந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 லட்சம் நபர்களுக்கு நிலையான வேலை வாய்ப்புகளை இத்திட்டம் மூலம் உருவாக்கலாம் என்று மத்திய அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதிலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்ட பின்னரே அரசாங்கம் நியமித்த வங்கிகள் மூலம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் தொகை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Source: News 18 Tamilnadu
Image Courtesy:Twitter