ட்ரோன் மகோத்ஸவத் 2022: ஸ்டார்ட் அப் நிறுவன ட்ரோனை பறக்கவிட்ட பிரதமர் மோடி!
By : Thangavelu
இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழா 'பாரத் ட்ரோன் மகோத்ஸவத் 2022'ஐ பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 27) தொடங்கி வைத்தார். அப்போது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை சேர்ந்த கண்காணிப்பு ட்ரோனை பிரதமர் மோடி பறக்கவிட்டு சோதனை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ட்ரோன் கண்காட்சி, தொழில்முனைவோரின் நல்லுணர்வு, இந்த துறையில் புதிய கண்டுபிடிப்பு ஆகியவை தம்மை வெகுவாக கவர்ந்துள்ளது எனவும், வேலைவாய்ப்பை உருவாக்க அதிகபட்ச வாய்ப்புகளை கொண்ட மிகப்பெரிய துறையாக ட்ரோன் துறை இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆஸ்டீரியா ஏரோஸ்பேஸ், தொழில் துறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பயன்பாடுகளுக்கு அதன் கரடுமுரடான, நம்பகமான மற்றும் செயல்திறன் சார்ந்த ட்ரோன்களை காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: News 18 Tamilnadu
Image Courtesy: India Today