பிரதமர் மோடி சிறுவயதிலிருந்தே கடின உழைப்பாளி, படிப்பில் திறமைசாலி: சகோதரர் பரபரப்பு பேட்டி!
By : Thangavelu
பிரதமர் நரேந்திர மோடி சிறு வயதில் முதலே கடின உழைப்பாளி என்றும், படிப்பில் திறமைசாலியாக இருந்தவர் என அவரது இளைய சகோதரர் பிரகலாத் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சி அமைத்து தற்போது 8 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனிடையே பிரதமர் மோடி இளைய சகோதரர் பிரகலாத் மோடி (அகில இந்திய நியாய விலைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத்தலைவர்) தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 8ம் ஆண்டை பூர்த்தி செய்துள்ளது எப்படி உணர்கிறீர்கள் என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்?
அதற்கு அவர் அளித்த பதிலில், ஒரு குடும்பமாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்துள்ளோம். கடந்த 1970ம் ஆண்டுகளில் அனைத்தையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார். ஆனால் தற்போது அவர் தேசத்தின் மகன். அவர் ஒவ்வொரு இந்தியனுக்கும் காவலர். ஏழைக்குடும்பத்தை சேர்ந்த அவர் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகின்றார். நமது இந்திய பிரதமை உலக தலைவரான அமெரிக்க அதிபர் பாராட்டுவது இதுவே முதன் முறையாகும். மோடி அவர்கள் நம்மை மட்டும் பெருமைப்படுத்தவில்லை, ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளார்.
மேலும், பிரதமர் ஒவ்வொரு இந்தியர்களுடனும் நின்றவர். அவர் 'சப்கா விகாஸ்' தான் அவர் விரும்பியது, அதற்காக இடையின்றி உழைத்து வருகிறார். அவரால் இன்று அனைத்து இந்தியர்களும் பெருமை அடைகிறோம். சிறுவயது முதலே கடினமாக உழைப்பாளியாக இருப்பார். படிப்பில் மிகவும் நன்றாக படித்து வந்தார். அவர் யாரையும் தொந்தரவு செய்யமாட்டார். அவர் அனைத்து வேலைகளிலும் கவனம் செலுத்துவார். மற்றும் வித்தியாசமாக இருப்பார். அவரை பார்த்து நாங்களும் பின்பற்றுவோம். அவரது கீழ் செயல்படும் அரசுக்கு 10க்கு 10க்கு மேல் மதிப்பெண் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Source: News 18 Tamilnadu
Image Courtesy: The Economic Times