Kathir News
Begin typing your search above and press return to search.

'பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்வி முறையாக இருக்க முடியாது' - பிரதமர் மோடி பிரகடனம்

தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதம் போன்ற தொன்மையான மொழிகளை முன்னோக்கிக் கொண்டு செல்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்வி முறையாக இருக்க முடியாது - பிரதமர் மோடி பிரகடனம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 July 2022 6:32 PM IST

தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதம் போன்ற தொன்மையான மொழிகளை முன்னோக்கிக் கொண்டு செல்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி கூறியதாவது, 'தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை கோட்பாடு கல்வியை குறுகிய சிந்தனையிலிருந்து விடுவித்து 21ம் நூற்றாண்டில் நவீன சிந்தனைகளுடன் இணைப்பதாகும்.

பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்வி முறையாக இருக்க முடியாது, இந்திய கல்வி முறை பட்டம் பெற்ற இளைஞர்களை உருவாக்குவதாக மட்டும் இருக்கக்கூடாது பணியாளர் வர்க்கத்தை உருவாக்கிய ஆங்கிலேயர் கல்வி முறைகள் நமக்கு பொருந்தாது.

தேசிய கல்விக் கொள்கை தாய் வழி கல்விக்கு வழிவகிக்கிறது, இதன் விளைவாக சமஸ்கிருதம் போன்ற தொன்மையான இந்திய மொழிகளும் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றன. புதிய கல்விப் புரட்சியை ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வெகு விரைவில் உலகின் கல்வி மையமாக இந்தியா உருவெடுக்கும் நமது இளைஞர்கள் திறமையானவர்களாகவும், தன்னம்பிக்கையுடனும், நடைமுறையை கணக்கிடக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கான பயணத்தை புதிய கல்விக் கொள்கையை தயார் செய்கிறது' என்றார் பிரதமர் மோடி.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News