முந்தைய ஆட்சி செய்த தவறால் ரூ.5 லட்சம் கோடி வங்கிக்கடன் மீட்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!
கடந்த ஏழு வருடங்களில் வங்கித்துறையில் பாஜக அரசு கொண்டு வந்த பல சீர்த்திருங்களால் வங்கிகளின் நிதிநிலை தற்போது மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
By : Thangavelu
கடந்த ஏழு வருடங்களில் வங்கித்துறையில் பாஜக அரசு கொண்டு வந்த பல சீர்த்திருங்களால் வங்கிகளின் நிதிநிலை தற்போது மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தின்போது ஒரு புதிய பாய்ச்சலுக்கான புதிய தீர்மானத்தை எடுக்கின்ற நேரம் வரும். அதனை தொடர்ந்து அந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ஒட்டுமொத்த தேசத்தின் பலமும் ஒன்று சேரும்.
மேலும், அதற்கான இலக்கை நிர்ணயிக்கப்படும் சூழலில் தான் நாம் இப்போது இருக்கிறோம். அதற்கான பணிகளை துவங்க வேண்டியதுதான். மேலும், கடந்த 7 ஆண்டுகளாக பாஜக அரசு வங்கித்துறை பல்வேறு புதிய சீர்த்திருத்தங்களை கொண்டு வநத்தது. இதனால்தான் இந்தத்துறை மிகவும் வலுவான நிலையில் உள்ளது. தற்போதைய நிலையில் வங்கிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டதாக இருக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னர் பல பிரச்சனைகள் இருந்தது. இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு தீர்வுகளை கண்டுள்ளோம். சட்டங்களை சீர்த்திருத்தினோம், கடன் மீட்பு தீர்ப்பாயத்தை வலுப்படுத்தினோம்.
மேலும், வங்கியில் கடனை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஒருவர் தப்பிச்செல்லும் போது அதுபற்றி விவாதிக்கின்றனர். ஆனால் அந்த கடன்களை துணிச்சலாக மீட்டு வரும்போது யாரும் அதனைப் பற்றி விவாதம் செய்வதில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட கடனில் தற்போது 5 லட்சம் கோடி ரூபாயை மீட்டுள்ளோம். உலகளவில் நமது வங்கித்துறையின் பலம் பெற்றுள்ளது.
அது மட்டுமின்றி குடிமக்களின் உற்பத்தி திறனை வெளிக்கொண்டுவர வேண்டும். இன்னும் அவர்களுக்காக பல ஜன்தன் வங்கி கணக்குகளை துவக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: ANI