Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் 3 குழுவினருடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை.!

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் 3 குழுவினருடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை.!

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் 3 குழுவினருடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2020 12:50 PM IST

கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் அதன் கோரமுகத்தை காட்ட துவங்கியது. இதில் கோடிக்கணக்கான மக்கள் இறந்தனர். இன்னும் பல உயிர்கள் மருத்துவமனையில் ஊசலாடி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவர் ஆமதாபாத், ஐதராபாத், புனே நகரங்களுக்கு சென்று அங்கு தடுப்பூசி உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்திருந்தார்.

இந்நிலையில், தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிற மேலும் 3 நிறுவனங்களான ஜெனோவோ பயோபார்மா, பயாலஜிக்கல் இ, டாக்டர் ரெட்டிஸ் ஆகியவற்றின் குழுவினருடன் இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடுகிறார். இந்த தகவல் பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News