அவசர பயணத்திற்கு நடுவிலும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற பிரதமர் மோடி - குவியும் பாராட்டுக்கள்
பிரதமர் தனது கான்வாய் நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

By : Mohan Raj
பிரதமர் தனது கான்வாய் நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் மேம்பாட்டுத் திட்டப் பணிகளைத் தொடங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகை புரிந்தார். இந்நிலையில், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், காந்திநகரில் இருக்கும் ராஜ் பவனுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நோயாளியை ஏற்றி கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அப்போது , அதனை கவனித்த பிரதமர் தனது பாதுகாப்பு வாகனங்களை ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுமாறு அறிவுறுத்தினார். இதனை அடுத்து, பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் சாலையின் ஓரம் சிறிது நேரம் நிருத்தி வழிவிட்டனர். அதன்பின்னர், அந்த ஆம்புலன்ஸ் வாகனம் அந்த இடத்தில் இருந்து சென்றது.
இந்த வீடியோவை குஜராத் மாநில பாரத ஜானத கட்சி தங்களுடைய அதிகார்வ பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அந்த காணொளியில் ஆம்புலன்ஸ்கு வழிவிட்டு பிரதமர் வாகனம் நின்று அதன் பின்னர் செல்வது தெரிகிறது. பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வீடியோவை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். இதனை அடுத்து, காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிவேக ரயிலைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.
