Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் கடின உழைப்பு.. ‘வி’ வடிவில் இந்திய பொருளாதார மீட்சி.. நிதியமைச்சகம் தகவல்.!

பிரதமர் மோடியின் கடின உழைப்பு.. ‘வி’ வடிவில் இந்திய பொருளாதார மீட்சி.. நிதியமைச்சகம் தகவல்.!

பிரதமர் மோடியின் கடின உழைப்பு.. ‘வி’ வடிவில் இந்திய பொருளாதார மீட்சி.. நிதியமைச்சகம் தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2020 1:39 PM IST

கொரோனா தொற்று காரமாக கடந்த மார்ச் மாதம் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது.


தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து வருவாய்களை அரசு இழந்தது. இதனால் கடும் சிரமத்தில் இருந்தது. இதனையடுத்து பிரதமர் மோடி படிப்படியாக ஊரடங்கை தளர்த்தினார். சில தளர்வுகள் தளர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் மீண்டும் பழைய இயங்க ஆரம்பித்தது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் உயர ஆரம்பித்து வருகிறது.


இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம், ஆங்கில எழுத்தான, ‘வி’ வடிவ மீட்சியில் இருப்பதாக, மத்திய நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார நிலை குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ், 7.5 சதவீதமாக உள்ளது. இது, அதற்கு முந்தைய காலாண்டின், 2வது காலாண்டுடன் ஒப்பிடும்போது கிடைப்பது என்று கூறப்படுகிறது.


இதுவே, கடந்த முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 23 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது, ‘வி’ வடிவ மீட்சியாகும். நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவுடன் அப்படியே இருப்பதையே இந்த வி வடிவம் காட்டுகிறது.


ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி விவசாயம், கட்டுமானம், தயாரிப்பு ஆகிய துறைகளின் பெரிய ஆதரவுடன் எட்டப்பட்டுள்ளது. சேவைகள் துறையும் வளர்ச்சிக்கு நன்கு உதவி செய்துள்ளது.


பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமும் நம்பிக்கையை அளித்துள்ளது. ராபி பருவத்தில், வேலையாட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. காரிப், ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரித்து உள்ளது.


இது போன்ற காரணங்களால் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். இருப்பினும் சவாலாக இருப்பது, கொரோனா வைரஸின் 2வது பரவல் ஒன்றுதான் என்று கூறப்படுகிறது. இதுவும் கடந்து இந்தியா மீண்டும் பழைய நிலைக்கு வந்து அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News