Begin typing your search above and press return to search.
ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும் பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடி வருகின்றார். இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் தீபாவளி ஒன்றாகும். இந்த பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

By :

இந்நிலையில், பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துளளார்.
அதே போன்று இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் என்ற முன்களப் பகுதிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு உள்ள ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றார். அவருக்கு ராணுவ வீரர்கள் தங்களின் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Source, Image Courtesy: ANI
Next Story