Kathir News
Begin typing your search above and press return to search.

துணிச்சல் தினத்தை முன்னிட்டு நேதாஜிக்கு புகழஞ்சலி செலுத்திய பிரதமர்.!

துணிச்சல் தினத்தை முன்னிட்டு நேதாஜிக்கு புகழஞ்சலி செலுத்திய பிரதமர்.!

துணிச்சல் தினத்தை முன்னிட்டு நேதாஜிக்கு புகழஞ்சலி செலுத்திய பிரதமர்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Jan 2021 4:14 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி இன்று, துணிச்சல் தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் நன்றியுணர்வுள்ள இந்தியா, அதன் சுதந்திரத்திற்காக நேதாஜி செய்த தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய அரசு இந்த ஆண்டு முதல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை துணிச்சல் தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதையடுத்து, நேதாஜியின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் துணிச்சல் தின கொண்டாட்டங்களில் மோடி கலந்துகொள்கிறார். "ஒரு சிறந்த சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் உண்மையான மகனுமான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுக்கு அவரது பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று பிரதமர் மோடி இந்தியில் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

"ஒரு நன்றியுள்ள நாடு நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் செய்த தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்வைத்திருக்கும்" என்று அவர் கூறினார்.

இதற்கிடையே 1897 இல் ஜனவரி 23 ஆம் தேதி பிறந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 ஆவது பிறந்த நாள் அடுத்த வருடம் வரவுள்ள நிலையில், இன்று முதல் ஒரு வருடத்திற்கு தொடர்ச்சியாக, நேதாஜியின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News