Kathir News
Begin typing your search above and press return to search.

உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சர்வதேச தரத்தில் புவிசார் குறியீடு - பிரதமரின் அபார முயற்சி!

உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சர்வதேச தரத்தில் புவிசார் குறியீடு - பிரதமரின் அபார முயற்சி!

உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சர்வதேச தரத்தில் புவிசார் குறியீடு - பிரதமரின் அபார முயற்சி!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  23 Jan 2021 12:56 PM IST

பச்சை பட்டாணி, உருண்டையான பச்சை கத்தரிக்காய் ஆகிய காய்கறிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஷார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வாரணாசி லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட இந்த காய்கறிகளை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபேடாவின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பச்சைப் பட்டாணி, உருண்டையான பச்சை கத்தரிக்காய் உள்ளிட்ட 1000 கிலோ எடையிலான காய்கறிகள் அனுப்பப்பட்டன.

வாரணாசி விமான நிலையத்திலிருந்து நேரடி ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளதன் வாயிலாக வாரணாசி, அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து புவிசார் குறியீடு பொருட்கள் உட்பட ஏராளமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சூழல் பிரகாசமாக உள்ளது.

புவிசார் பொருட்களுக்கும், உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்கு அவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். இதைக் கருத்தில் கொண்டு தனித்துவமானதும், சர்வதேச சந்தையில் ஊக்குவிக்கும் தகுதி பெற்றதும், புவிசார் குறியீடு சான்றிதழைப் பெறவிருக்கும் ராம்நகர் பண்டா என்று அழைக்கப்படும் உருண்டையான பச்சை கத்தரிக்காய் விளையும் பகுதிகளுக்கு அபேடா அமைப்பின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

வாரணாசி விமான நிலையத்தில் நேரடி ஏற்றுமதிக்கான வசதிகள் இல்லாத காரணத்தால், லக்னோ அல்லது தில்லியிலிருந்து ஏற்றுமதியாளர்கள் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்தனர்.

பலதரப்பட்ட முகமைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் வாயிலாக ஏற்றுமதிக்குத் தேவையான அனைத்து ஒப்புதல்களையும் வழங்கும் வசதிகள் வாரணாசியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News