கொரோனா தடுப்பு பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை.!
கொரோனா தடுப்பு பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது அனைவரின் உயிர்களையும் காப்பாற்றுவதற்காக தங்களது உயிர்களை பணயம் வைத்து மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தனர். அது போன்ற சமயத்தில் நாடு முழுவதும் பல மருத்துவர்கள் தங்களின் இன்னுயிரை இந்த நாட்டிற்காக தியாகம் செய்துள்ளனர்.
அவர்களின் குடும்பத்தில் உள்ள வாரிசுகள் மீண்டும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு மத்திய அரசு உள்ஒதுக்கீட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா தடுப்பு முன்களப் பணியின்போது உயிரிழந்தவர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய தொகுப்பில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்படும். தன்னலமின்றி கொரோனா தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகள் இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.