Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் உற்பத்தித் திறன், ஏற்றுமதியை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் - எட்டப்பட்ட இமாலய இலக்கு!

இந்தியாவின் உற்பத்தித் திறன், ஏற்றுமதியை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் - எட்டப்பட்ட இமாலய இலக்கு!

இந்தியாவின் உற்பத்தித் திறன், ஏற்றுமதியை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் - எட்டப்பட்ட இமாலய இலக்கு!

Muruganandham MBy : Muruganandham M

  |  17 Feb 2021 9:52 AM GMT

இந்தியாவின் உற்பத்தித் திறனையும், ஏற்றுமதியையும் அதிகரிப்பதற்காக, மின்கலம், மின்னணு தொழில்நுட்பப் பொருட்கள், தானியங்கி வாகனங்கள்/ மருந்து, தொலை தொடர்பு, ஜவுளித்துறை, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 10 துறைகளில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய அரசு அனுமதித்தது.

ரயில்வேத்துறையில் ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்களை உள்நாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் 75 சதவீத மின் பொருட்கள் உள்நாட்டு நிறுவனங்களில் வாங்கப்படுகின்றனர். மின்சார ரயில்கள் தயாரிப்பில், 60 சதவீத மின் பொருட்கள் உள்நாட்டு நிறுவனங்களிடம் வாங்கப்படுகின்றன.

உற்பத்தி மற்று முதலீட்டுக்கு இந்தியாவை உலகிலேயே சிறந்த இடமாக மாற்றவும், பசுமை தொழில் நகரங்களை உருவாக்கவும் தேசிய தொழில் வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாக பல தொழில் வழித்தடத் திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதற்காக தேசிய தொழில் வழித்தட மேம்பாடு மற்றும் அமல்படுத்தும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தில்லி, மும்பை, தொழில் வழித்தடம், நாட்டின் முதல் தொழில் வழித்தடமாக அமல்படுத்தப்பட்டது. தற்போது இங்கு கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார மண்டலங்களுக்கு பன்முக இணைப்புகளை வழங்க தேசிய பெரும் திட்டத்தின் கீழ் மேலும் 11 தொழில் வழித்தடங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2017-18ம் ஆண்டில் இந்தியா 498.61 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்தது. 2018-19ம் ஆண்டில் 538.08 பில்லியன் அமெரிக்க டாலர், 2019-20ம் ஆண்டில் 526.55 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. 2019-20ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி 2.14 சதவீதம் குறைந்தது.

மேக் இன் இந்தியா திட்டத்துக்காக, அன்னிய முதலீடுகளை கவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், மாநில அரசுகள் கூட்டங்களை நடத்தவும், பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தேவையான உதவிகளை மத்திய அரசு அளித்து வருகிறது. அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க, சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்கவும், நாட்டில் எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டு மற்றும் இயற்கை வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், உலக வேளாண் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பை இரட்டிப்பாக்கவும், வெளிநாட்டு சந்தைகளில் இந்திய விவசாயிகள் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெற்று பயனடையவும், விரிவான வேளாண் ஏற்றுமதி கொள்கையை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News