Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகள் - அடுத்து தமிழ்நாடு, தெலங்கானாவில் வரப்போகும் வேற லெவல் திட்டங்கள்!

Proposals for Construction of 3.61 Lakh Houses approved under PMAY

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகள் - அடுத்து தமிழ்நாடு, தெலங்கானாவில் வரப்போகும் வேற லெவல் திட்டங்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  26 Nov 2021 2:54 AM GMT

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழுவின் 56-வது கூட்டம் புதுதில்லியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3.61 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வீடுகள் கட்டும் பணிகளை விரைவுபடுத்த தாமதமில்லாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் அவர் கேட்டுக் கொண்டார். "தவறான தகவல்களை அகற்றும் நோக்கத்துடன் இ-நிதி தொகுப்பு இணையம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த இணையத்திலிருந்து நிதி சார்ந்த அனைத்துத் தரவுகளையும் வெளிப்படைத் தன்மையோடு பெற முடியும்" என்று திரு.மிஸ்ரா கூறினார். இந்தத் திட்டத்தை விரைவில் அமலாக்க பகுதி வாரியாக திட்ட அலுவலர்களுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயிற்சி அளிக்க வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவில் மாதிரி – 2-ன் கீழ் குறைந்த செலவிலான வாடகை வீட்டுவசதி வளாகங்கள் கட்டுவதற்கான யோசனைக்கும், வீட்டுவசதி அமைச்சக செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளார். புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ரூ.39.11 கோடி மானியத்துடன் நகர்ப்புறங்களுக்குக் குடிபெயர்ந்தோர் மற்றும் ஏழைகளுக்கு மொத்தம் 19,535 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 1.14 கோடியாக உள்ளது. அதில் 89 லட்சத்துக்கும் அதிகமானவை கட்டுமானப் பணிகளுக்காக அனுமதிக்கப்பட்டன. மேலும் 52.5 லட்சங்கள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் மொத்த முதலீடு 7.52 லட்சம் கோடி, மத்திய உதவி 1.85 லட்சம் கோடி. இதுவரை, 1.13 லட்சம் கோடி நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News