Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துஸ்தானி முஸ்லீமாக இருப்பதில் பெருமிதம்- குலாம் நபி ஆசாத்தின் நெகிழ்ச்சி உரை.!

இந்துஸ்தானி முஸ்லீமாக இருப்பதில் பெருமிதம்- குலாம் நபி ஆசாத்தின் நெகிழ்ச்சி உரை.!

இந்துஸ்தானி முஸ்லீமாக இருப்பதில் பெருமிதம்- குலாம் நபி ஆசாத்தின் நெகிழ்ச்சி உரை.!

Saffron MomBy : Saffron Mom

  |  10 Feb 2021 9:20 AM GMT

மாநிலங்களவையில் ஓய்வுபெறும் MP களுக்காக அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களும் இணைந்து தனது நெகிழ்ச்சி உரைகளை வெளிப்படுத்தி ஒரு நெகிழ்ச்சிமிக்க தருணமாக மாறியது.

காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கான கண்ணீர் மல்கிய பிரதமரின் உரைக்குப் பின்பு, ஜம்மு வில் இருந்து டெல்லி வரை தனது அரசியல் பயணத்துக்காகக் குலாம் நபி ஆசாத் MP களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் தனது இறுதி உரையை வழங்கிய குலாம் நபி ஆசாத், "நான் பாகிஸ்தானுக்கு இதுவரை சென்றதில்லை. அதனால் நான் ஒரு அதிர்ஷ்டசாலியாகவே கருதுகிறேன். நான் பாகிஸ்தானில் இருக்கும் சூழ்நிலைகள் குறித்து அறிந்த போது, இந்துஸ்தானியை முஸ்லீமாக இருப்பதில் நான் பெருமைப் படுகிறேன்," என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனது உரையில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்கு அஞ்சலி செலுத்தியதோடு, முன்னாள் பிரதமரிடம் இருந்தே அவையை நடத்தக் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். "நான் அடல் ஜீ இடம் இருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன், எவ்வாறு தடைகளை உடைத்து சபையை நடத்துவது குறித்தும் கற்றுக்கொண்டேன்," என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

மேலும் மாநிலங்களவையில் தனது ஓய்வுபெறும் உரையில் குலாம் நபி ஆசாத் பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்தார். "எங்கள் இருவருக்கும் இடையில் பல சண்டைகள் நடந்துள்ளன. ஆனால் பிரதமர் ஒருபோதும் அதனைத் தனிப்பட்ட கருத்தாக எடுத்துக்கொள்ளவில்லை," என்று குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், நாடு ஒன்றுகூடி இயங்குகின்றது சண்டைகளில் இயங்கவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

முந்தைய நாளில் பிரதமர், மாநிலங்களவையில் தனது நெருங்கிய உறுப்பினரான குலாம் நபி ஆசாத் குறித்துப் பேசும்போது சற்று உடைந்தார். குஜராத்தில் யாத்திரீகள் மீது நடந்த பயங்கரவாத வன்முறையின் போது அவர்களது உரையாடலை அவர் நினைவு கூர்ந்தார். இந்த சம்பவம் குறித்து முதலில் தனக்கு அழைப்பு விடுத்தது குலாம் தான் என்று கூறினார்.

இந்த சம்பம் குறித்து தனது அலைபேசியில் தெரிவிக்கும் போது குலாம் நபி ஆசாத் அழுகையை நிறுத்தாமல் பேசினார் என்று கண்ணீர் வெளிப்படப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தனது உரையில் தடுமாற்றம் இருந்த போதிலும் பிரதமர், "உயர் அலுவலகத்தில் பதவி வரலாம், ஆட்சி வரலாம் இதை அனைத்தையும் கையாள்வது குறித்து ஒருவர் குலாம் நபி ஆசாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்." "நீங்கள் ஓய்வு பெற்றாலும் நான் உங்களுடன் தொடர்பில் இருப்பேன் உங்களிடம் ஆலோசனைகளைப் பெறுவேன். உங்களுக்காக எனது கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும்," என்று பிரதமர் மோடி குலாம் நபி ஆசாத்திடம் கூறினார்.

2014 ஜூன் 8 இல் இருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக எதிர்க் கட்சியில் தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையிலிருந்து பிப்ரவரி 15 இல் ஓய்வு பெறுகிறார்.

பல ஆண்டுகளாக ஆசாத் பொது மக்களின் குரலாக இருந்து அரசாங்கத்திற்கும் மற்றும் எதிர்க்கட்சிக்கும் பணியாற்றி வந்துள்ளார் என்று மாநிலங்களவை தலைவர் M வெங்கையா நாயுடு தெரிவித்தார். சபையில் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி இழப்பிற்குப் பின்னர் ஆசாத்தின் ஓய்வு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News